சாத்தான் குளம் இரட்டை கொலை!! அரசை விட அதிகமான நிதியை அறிவித்த வழங்கிய தி.மு.க !! எவ்வளவு தெரியுமா ?

5
42

தூத்துக்குடி : சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசார் தாக்கியதால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை கண்டித்து, வணிகர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூபாய் 25 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி கனிமொழி அந்த தொகையை நேரடியாக வழங்கினார்.

நீதிக்கான போராட்டத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். முன்னதாக, ஜெயராஜ் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், அரசுப் பணியும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here