சாத்தான்குளம் இரட்டை கொலை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு

0
28

தூத்துக்குடி : சாத்தான்குளம் சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தந்தை – மகன் உயரிழந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது வேறொரு புகாரில் கொலை முயற்சி வழக்கு பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேனி காவல்நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கை நமது புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதில், அண்ணனின் மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, விஷம் வைத்து கொல்ல முயன்றதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் 5-வது குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீதரின் அண்ணன் மகள் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியில், அதிகாரத்தை பயன்படுத்தி இதுவரை விசாரணை நடத்த விடாமல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தடுத்து வந்ததாகவும், அவரால் தங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here