சவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்

78
646

குமரி : குமரி மாவட்டத்தில் இருந்து சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற ஜார்ஜ் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மகளின் திருமணத்துக்கு பணத்தோடு வருவார் என்று எதிர்பார்த்த அவரது குடும்பத்தினரருக்கு அவர் கொல்லப்பட்ட செய்தி மனதில் இடியாக இறங்கியுள்ளது.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கிராத்தூர் மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் ஜார்ஜ். இவர் தன் மகளின் திருமணத்துக்கு பணம் சேர்ப்பதற்காக சவுதி அரேபியா நாட்டிற்கு பணிக்கு சென்றுள்ளார். இவரை குமரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் தான் பணிக்கு அழைத்து சென்றுள்ளார்.

சம்பவத்தன்று தன்னுடைய மகளின் திருமணத்துக்கு பணம் அனுப்ப வேண்டும் அதனால் காண்ட்ராக்டர் கிறிஸ்டோபரிடம் தனது நான்கு மாத சம்பளத்தை கேட்டுள்ளார் ஜார்ஜ். ஆனால் கிறிஸ்டோபர் சம்பளம் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் வாய் தகராறு முற்றியது. இதனால் கோவப்பட்ட கான்ட்ராக்டர் கிறிஸ்டோபர் ஜார்ஜை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கான்ட்ராக்டர் கிறிஸ்டோபர்

கிறிஸ்டோபர் தாக்கியதில் ஜார்ஜின் வயிற்றில் கடுமையான உள்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 நாட்களாக இயற்கை உபாதைகள் வெளியேறாமல் வயிறு வீக்கமடைந்து தனது அறையில் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார் ஜார்ஜ்.

மூன்று நாட்கள் கழித்து அவரை தாக்கிய கிறிஸ்டோபரே ஜார்ஜை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்ஜை தாக்கிய கிறிஸ்டோபர் கராத்தேயில் கறுப்பு பட்டை பெற்றவர். இவர் இதுபோல் பல பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிரட்டுவது வழக்கமான ஒன்று தான் அங்கு பணிபுரியும் சில பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் நேயால் இறந்துபோனதாக தான் முதலில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சவுதி அரேபியாவில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் தான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த பிறகு அவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இது அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜை கொலை செய்த கொலைகாரனுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

78 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here