கோரோனோ மிரட்டல்: திருப்பதி முக்கிய அறிவிப்பு

1
123

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் `கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல் பெரிய அளவில் இருந்து வருகின்றது. இப்போது இந்தியாவிலும் சிலருக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரமும் பெரிய அளவில முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் பயணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களைத் தவிர்த்து வருகின்றனர்.

இதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொந்தரவு உள்ள பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். பக்தர்கள் தங்களின் பயணத் திட்டங்களைச் சில மாதங்களுக்கோ சில வாரங்களுக்கோ தள்ளி வைத்து பிறகு வரலாம் என்றும் கூறியுள்ளனர்.

திருப்பதி, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடம் என்பதால், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால், இதைத் தவிர்ப்பதற்காக இந்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் வரிசைகளை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும் உததரவிடப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் தென்பட்டாலும், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனென்றால் கொரோனா வைரஸ் மூன்று அடி தூரம் பரவக்கூடியது என்பதால் இத்தகைய முன்னேற்பாடுகளுடன் வரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here