கோயில்களில் சாத்தான் இருப்பதாக சும்மாதான் சொன்னேன்.. மோகன் சி லாசரஸ் அந்தர் பல்டி !

0
154

கிறித்துவ மத போதகர் மோகன் சி லாரசஸ் கோயில்களில் சாத்தான் இருப்பதாக பேசி அதனை தற்போது மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

”அதாவது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டைப் போல சாத்தானுடைய அரங்குகள் கிடையாது. அதை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இங்கு இருக்கிறது போல பெரியபெரிய கோயில்கள் சாத்தானுடைய அரங்குகள் கிடையாது. கும்பகோணம் போனால் நாம் நம்ப முடியாத அளவுக்கு அங்கே சாத்தான் அத்தனை கோயில்களிலும், இடங்களிலும் நிறைந்திருக்கிறான் எனப்பேசிய மத போதகர் மோகன் சி லாரசஸ் அப்படியே இப்போது மாற்றி பேசி இருக்கிறார்.

எல்லா மதத்தில் உள்ளவர்களையும் ஒரேமாதிரி நேசிக்கிறேன். நான் வேறு எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசியதில்லை. நான் யாரையும் மதம் மாற்ற முயற்சிப்பது இல்லை. உண்மையிலேயே நான் பேசியதைக் கேட்டு நீங்கள் வருத்தமடைந்து இருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். உங்களுடைய நம்பிக்கையை குறை சொல்லி பேசுவது, இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல. அதை நான் செய்வதில்லை” என விளக்கம் அளித்துள்ளார் .

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here