கொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’

54
622

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படாத சூழலில், இந்த காய்ச்சலில் இருந்து தப்பிக்க, கைகளை எப்போதும் தூய்மையாய் வைத்திருப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்து விலகி இருப்பது இரண்டும் முக்கியம் என்று தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குநர் மகிழ்மாறன் தெரிவித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணத்தைத் தழுவியுள்ள நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பும் பலருக்கும் விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனாவில் இருந்து திரும்புபவர்கள், ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிப்புக்கு யாராவது ஆளானால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன?

சாதாரண காய்ச்சல் போலதான் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடங்கும். சளி, தொடர் இருமல், உடல்வலி என தொடங்கி, மூச்சுத்திணறல் அதிகரிக்கும். இந்த காய்ச்சலின் தாக்குதல் இந்தியாவில் இதுவரை பரவவில்லை. சீனாவில் கூட, வுஹான் மாகாணத்தில் உள்ளவர்களுக்குத்தான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம். உடலில் எதிர்ப்புச் சக்தி இருந்தால் எந்தவிதமான கிருமியாக இருந்தாலும், அது பாதிப்பதை நம் உடலே கட்டுப்படுத்திவிடும்.

கொரோனா வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுக்கமுடியும்?

பாதிக்கப்பட்டவர்களோடு மற்றவர்கள் தொடர்பில் இருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல் ஏற்படும்போது கைகளை வைத்து மூடி சளி வெளியில் படாதவாறு செய்யலாம். அவரின் சளியின் துளி ஏதாவது உங்களுக்குதெரியாமல் உங்கள் மீது பட்டால், நோய் தொற்று ஏற்படவாய்ப்புண்டு. இதுவரை நோயின் மூலக் காரணம் தெரியவில்லை என்பதால், இதன் பரவலைத் தடுக்க, கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதை பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பொருட்களை நீங்கள் தொடக்கூடாது.

கைகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். பாதிக்கப்பட்டவரோடு நேரடியாக தொடுவதோ, அவருடைய எச்சில் படும்படி அருகில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தால் முகமூடி அணிந்துகொள்ளவேண்டும்.

54 COMMENTS

 1. Hi! I know this is kinda off topic but I was wondering which blog platform are
  you using for this website? I’m getting sick and tired of WordPress because I’ve
  had problems with hackers and I’m looking at options for another
  platform. I would be great if you could point me in the direction of a
  good platform.

 2. I am really inspired with your writing skills and also with the layout on your blog.
  Is this a paid topic or did you customize it your self?

  Anyway stay up the excellent high quality writing,
  it is rare to look a nice weblog like this one these days..
  adreamoftrains web host

 3. I simply couldn’t leave your web site prior to suggesting that I extremely loved
  the usual information a person supply for your guests? Is going to be
  back incessantly to check up on new posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here