கொரோனா பீதி: ஒரு ரூபாய்க்குப் பிரியாணி!’ – 2 மணி நேரத்தில் காலி செய்த பொதுமக்கள்

14
229

கொரோனா பீதியால் ஒரு ரூபாய்க்குப் விற்க்கப்பட்ட பிரியாணியை 2 மணி நேரத்தில் பொதுமக்கள் காலி செய்தனர்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சிக்கன் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ சிக்கன் 28 ரூபாய்க்கு விற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் 10 முட்டை இலவசம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

சிக்கன் விலை வீழ்ச்சி காரணமாக சிக்கன் பிரியாணி விற்பனையும் பாதித்துள்ளது. இதனால் கோழிக்கறி வியாபாரிகள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்தனர்.

இந்தச் சூழ்நிலையில் 120 கிலோ கோழிக்கறியில் தயாரான சிக்கன் பிரியாணி, 2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது.

இது எப்படி என்கிறீர்களா… எல்லோமே வியாபார யுக்திதான். இது வேறு எந்த நாட்டிலும் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்தான் நடந்துள்ளது.

பொன்னேரிப் பகுதியில் புதியதாக ஒரு ஹோட்டல் திறக்கப்பட்டது. சிக்கன் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் மவுசு இல்லாததால் கடையின் உரிமையாளர், முதல் நாளிலேயே வியாபாரம் இல்லை என்றால் என்ன செய்வது என யோசித்தார்

இதையடுத்து கடையின் திறப்பு விழா சலுகையாக ஒரு ரூபாய்க்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைப் பார்த்த பொதுமக்கள், ஆச்சர்யமடைந்தனர். இந்தத் தகவல் பொன்னேரிப் பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.

சரியாக மதியம் 12 மணியளவில் பிரியாணி விற்பனை தொடங்கியது. அதை வாங்க ஏற்கெனவே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு ரூபாய் கொடுத்து முண்டியடித்து மக்கள் பிரியாணி வாங்கினர். அதன்காரணமாக 120 கிலோ சிக்கனில் தயாரான பிரியாணி, 2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. பலருக்கு பிரியாணி கிடைக்கவில்லை.

பிரியாணி கடை முன் கூட்டம் அலைமோதியதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், “கொரோனா பீதியால் சிக்கன் பிரியாணி விற்பனையில் பாதிக்கப்பட்டதாக மற்ற கடைக்காரர்கள் கூறினர். அதனால்தான் புதிதாகத் திறக்கப்பட்ட என்னுடைய கடையில் சிக்கன் பிரியாணி விற்பனை ஆகுமா? என்ற சந்தேகம் இருந்தது. அதனால்தான் முதல்நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்றோம், அதனால் எங்களுக்கு நஷ்டம் என்றாலும் சிக்கனுக்கும் கொரோனாவுக்கும் தொடர்புஇல்லை என்பது உறுதியாகியுள்ளது” என்றார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here