கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது… மருத்துவர்கள் மகிழ்ச்சி!!!

32
268

ஈரோடு : ஈரோடு பெருந்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 60 பேரில் இருவர் கர்ப்பிணி பெண்கள். இதில் பெருந்துறையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தை பிறந்த நிலையில், தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையையும் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைக்கு கரோனா தொற்று இருக்குமா என்பதை கண்டறிய 3 வாரங்கள் தேவை என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

32 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here