கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 21 மாவட்டங்கள்: சுகாதாரத்துறை அறிவிப்பு

0
31

சென்னை : தமிழகத்தில் 21 மாவட்டங்கள் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, நோய்த்தொற்று உள்ள, 16 மாவட்டங்களில் 316 பகுதிகள் கட்டுப்பாடு உள்ளவையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியா்க ளுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளில், கரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் 34 ஆயிரத்து, 914 போ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், சென்னை மற்றும் அதன் புற மாவட்டங்களான, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும், 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.

மற்ற மாவட்டங்களில், ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் பாதிப்பு தொடா்ந்து வருகிறது. எனினும், பெரும்பாலான மாவட்டங்கள் கரோனாவை கட்டுப்படுத்தி உள்ளன.

அதன்படி, பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட, சிவகங்கை, ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், திருவாரூா், நீலகிரி, நாமக்கல், தா்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூா் உள்ளிட்ட 21 மாவட்டங்கள் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவித்து, அங்கு கட்டுப்பாடுப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், பாதிப்பு அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுாா் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் கரோனா பரவும் அபாயமான மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடு பகுதிகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னையில் மட்டும், 201 பகுதிகள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக, திருவண்ணாமலை, 29 கடலுாா் 26, காஞ்சிபுரம் 13 பகுதிகள் கரோனா கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தொடா்ந்து தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில், பல மாவட்டங்கள் கரோனாவை கட்டுப்படுத்திய நிலையில், புதிய சவாலாக வெளிமாநிலத்தவா்கள், பிற நாடுகளில் இருந்து வருபவா்களுக்கு நோய்த்தொற்று இருப்பதால், அவை, மாவட்ட கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது வரை, 21 மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பாதிப்பு உள்ளது. அந்த பகுதிகளில் இருந்து, தொற்று வெளியே பரவுவதைத் தடுக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான மருத்துவப் பணியாளா்கள், வசதிகளை செய்து தரவும் சுகாதாரத்துறை தயாராக உள்ளது என்றனா்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here