குமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

11
161

நாகர்கோவில் : மோடி தலைமையிலான நடுவண் அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொன். மணிகண்டன் அவர்கள் பேசியதாவது, இந்தியா முழுவதும் விவசாயிகளுடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்திய பிரதமர் மோடி அவர்களின் வேளாண் மசோதா. தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதா மிகவும் அபாயகரமானது. இனிமேல் வேளாண் விளை பொருட்களை பெரும் முதலாளிகள் சட்டப்படி பதுக்கலாம். இதனால் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் வேளாண் தொழிலை நம்பி மொத்தம் 70 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 50 கோடி பேர் வேளாண் மசோதாவால் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேறி விடுவார்கள். இதனால் இந்தியா கடுமையான உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளும். அதனால் இந்த வேளாண் மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here