குமரி: பாஜக வேட்பாளர் யார்.? ஓரம் கட்டப்படும் பொன்னார்.!

0
27

நாகர்கோவில் : 50ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சிட்டிங் எம்பியாக இருந்த வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.இதனால் அங்கு எம்பிக்கான இடம் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் பாஜக தலைமை கடைக்கண் பார்வை கிடைக்காமல் பொன்னார் இருப்பதாகவும் அதேநேரத்தில் நயினார் நாகேந்திரனும் பொன்.விஜயராகவனும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்கிற தகவலும் தற்போது கசிந்திருக்கிறது. இதனால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம் பொன்னார்.

பொன்ராதகிருஷ்ணன்:
10முறை பாஜக சார்பில் போட்டியிட்டவர்.இதில் 9முறை எம்பிக்கும் 1முறை எம்எல்ஏ தேர்தலில் களம் கண்டு தோல்வியடைந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒரு முறை மத்திய இணைஅமைச்சர். 2014ம் ஆண்டு பிரதமர் மோடி அமைச்சரவையில் இணை அமைச்சராக வலம் வந்தார்.இருந்தபோதிலும் தன்தொகுதியை தக்கவைத்துக்கொள்ள வில்லை.”தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழி இவருக்கு சரியாக பொருந்தும். தொகுதிக்குள் மட்டுமல்ல ஊடகங்களிலும் ஏதாவது சர்ச்சையாக பேசிவிடுவார். காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது ஜீலைமாதம் போராட்டம் ஒவ்வொரு ஜீலை மாதமும் தொடர்ந்து நடத்தினார்.அமைச்சரானது அந்த போராட்டத்தை கைவிட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பத்தியிருக்கிறது.

விக்டோரிய கவுரி:
இவர் அகில இந்திய பாஜக மாநில மகளிர் அணி தலைவர்.கடந்த எம்பி தேர்தலில் கன்னியாகுமரி எம்பி வேட்பாளராக விக்டோரியாகவுரி பெயர் இடம் பெற்றிருந்தது. கடைசி நிமிடத்தில் ராஜ்நாத்சிங் சிபாரிசில் பொன்னார் பெயர் இடம்பெற்றது.இவரும் எம்பி சீட் ரேசில் இருக்கிறார்.தற்போது இவருக்கு மத்திய அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

பொன்.விஜயராகவன்:
இவர் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள எதிர்கட்சி தலைவர் பொன்னப்பநாடார் மகன் ஆவார்.விலவங்கோடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துவிட்ட நிலையில் சென்னையில் குடியிருந்து வரும் விஜயதரணிக்கு மணிசங்கர்அய்யர் சிபாரிசில் விஜயதரணிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த விஜயராகவன் பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக்கொண்டார். உடனடியாக அவருக்கு விவசாய அணி பிரிவு தலைவர் பதவி வழங்கியது பாஜக. விஜயராகவன் வளர்ந்து விடக்கூடாது என்பதில் பொன்னார் அதிக கவனம் செலுத்தி கண்காணித்துக்கொண்டார்.

3முறை காங்கிரஸ், ஜனதராகதளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கிள்ளியூர் தொகுதியில் எம்எல்ஏவாக வலம் வந்தவர் விஜயராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு சொந்த மருகனிடம் கிள்ளியூர் தொகுதியில் டெப்பாசிட் இழந்தார்.

இந்த தோல்வி அவருக்கு அரசியல் வாழ்க்கையில் மனச்சோர்வை ஏற்படுத்தியது.இந்த நிலையில் மீண்டு அவரை பாஜக தட்டி எழுப்பியிருக்கிறது.இவரது மனைவி கிறிஸ்தவர். இவர் இந்து. இவரை குறி வைத்திருக்கிறது பாஜக தலைமை . தற்போது கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு நயினார் நாகேந்திரன் பொன். விஜயராகவன் இவர்கள் பெயர்கள் தான் இடம் பெற்றிருக்கிறது. இவர்களில் யாருக்கு சீட் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here