கள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி !

11
167

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மலைக்கோட்டாலம் என்ற கிராமத்தில் காப்புக்காடு ஒன்று வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காப்புக்காட்டில் மான்குன்று என்ற இடத்தில் பாறைகளுக்கு இடையே மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் ஆய்வுக்காக சென்ற வனக்காப்பாளர் நெல்சன் மண்டேலா, நேற்று இந்த மனித எலும்புக் கூட்டை கண்ட பிறகு வரஞ்சரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் காவலர்கள் சேர்ந்து எலும்புக்கூடு கிடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதையடுத்து, விழுப்புரம் தடவியல் வல்லுநர் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு எலும்புக்கூடு தடவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஆய்வில் அந்த எலும்புக்கூடு சுமார் 60 வயதுடைய பெண்ணுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், எலும்புக்கூட்டில் ஒரு கை உள்ளிட்ட சில எலும்புத் துண்டுகள் காணாமல் போய் இருப்பதாகவும், அவற்றை வனவிலங்கு தூக்கிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையினர் அந்த எலும்புக்கூடை ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இறந்த அந்தப் பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here