கல்லூரியில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு அடித்தது யோகம்!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

0
25

சென்னை : கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளை தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வு எழுத விலக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இறுதி பருவத்‌ தேர்வுகளைத்‌ தவிர பிற பருவப்பாடங்களின்‌ அனைத்து தேர்வும்‌ ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனால்‌ ஏப்ரல்‌-மே மாதங்களில்‌ நடைபெற இருந்த பருவ தேர்வின்‌ போது, அரியர்‌ தேர்வு எழுத கட்டணம்‌ செலுத்தி காத்திருந்த மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர்‌.

அவர்களுக்கு பல்கலைகழக மானியக்குழு, இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின்‌ படி மதிப்பெண்கள்‌ வழங்கப்படும்‌ என்றும்‌, கலை-அறிவியல்‌, பாலிடெக்னிக்‌, பொறியியல்‌ இளங்கலை முதுகலை படிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்‌ என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால்‌ பொறியிலில்‌ மற்றும்‌ கலைக்கல்லூரிகளில்‌ 1 முதல்‌ 30 பாடங்கள்‌ வரை அரியர்‌ வைத்திருந்த மாணவர்கள்‌ தேர்வு எழுதாமலேயே அந்த பாடங்களில்‌ தேர்ச்சி பெறுகின்றனர்‌. பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here