கன்னியாகுமரியில் புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளர்

0
52

கன்னியாகுமரி: புகார் கொடுக்க சென்றவரை பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்ததாக காவல் உதவி ஆய்வாளர் மீது இளம் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த அந்த இளம் பெண் அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு கடந்த சில மதங்காளுக்கு முன்பு புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு உதவி செய்வதாக கூறி அறிமுகமான உதவி ஆய்வாளர் ஆள் இல்லாதா நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கருவுற்ற அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருகலைப்பையும் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பெண் மாவட்ட ஆட்சியிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். மேலும் தான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ள அந்த இளம் பெண் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் கன்னியாகுமரி போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here