உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பு!

0
54

திண்டுக்கல் : உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா, கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று சமூகத்தை சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here