உடலையே கொடையாக தந்து உயிர்நீத்த தங்கையின் மறைவு பேரிழப்பு! – சீமான் இரங்கல்

0
131

ஆறு பேரின் மறுவாழ்வுக்குத் தனது உடலையே கொடையாக தந்து உயிர்நீத்த தங்கை கனிமொழியின் மறைவு ஈடுசெய்ய முடியா பேரிழப்பு! என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

‌கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவம் கிராமத்தைச் சேர்ந்தவரும், எமது கட்சியின் இளைஞர் பாசறை தொகுதிச் செயலாளர் தம்பி இள. சதீசுகுமாரின் சகோதரியும், எமது கட்சியின் உறுப்பினருமான தங்கை பேராசிரியர் கனிமொழி அவர்கள் சாலை விபத்தில் மறைந்த செய்திகேட்டு மிகுந்தத் துயருற்றேன். எளியப் பின்புலத்தில் பிறந்து தனது அயராத உழைப்பினாலும், அளப்பெரும் அறிவாற்றலாலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தில் கெளரவப் பேராசிரியராக உயர்ந்த தங்கை விபத்தில் உயிரிழந்தது ஏற்கவே முடியாத கொடுந்துயராகும். ஈடுசெய்ய இயலா பேரிழப்பை சந்தித்து நிற்கும் தம்பி இள.சதீசுகுமாருக்கும், தம்பியின் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து குடும்பத்துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கெடுக்கிறேன்.

தங்கை கனிமொழியின் உடலுறுப்புகள் ஆறு பேருக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டிருக்கிற செய்தியறிந்து பெருமிதம் கொள்கிறேன். இறந்தும் பிறர் உயிர்வாழ தன்னுடலை கொடையளித்த தங்கை, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள்’ என வள்ளுவப்பெருமகனார் கூறிய மறைமொழிக்கேற்ப தெய்வமாகி ஆறு பேருக்கு மறுவாழ்வு தந்திருக்கிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here