இன்றைய (24-03-2020) ராசி பலன்கள்

0
83

ஜோதிடர் ஸ்ரீ எஸ் பத்மநாபா கோவர்தனன்

மேஷம்

தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.

பரணி : எண்ணங்கள் ஈடேறும்.

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
—————————————

ரிஷபம்

பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகளால் சேமிப்பு உயரும். கடல் மார்க்கப் பயணங்களால் இலாபம் உண்டாகும். தந்தையுடன் எழுந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.

ரோகிணி : சேமிப்பு உயரும்.

மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
—————————————

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

மிதுனம்

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
—————————————

கடகம்

எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். நண்பர்களுடான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூசம் : உதவிகள் செய்வீர்கள்.

ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————

சிம்மம்

சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : அனுசரித்துசெல்லவும்.

பூரம் : வாதத்தை தவிர்க்கவும்.

உத்திரம் : கவனம் வேண்டும்.
—————————————

கன்னி

மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : தரிசனம் கிடைக்கும்.

அஸ்தம் : இலாபம் உண்டாகும்.

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.
—————————————

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

துலாம்

வாரிசுகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தலைமை பதவியில் உள்ளவர்களிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : நிதானம் வேண்டும்.

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————

விருச்சகம்

வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.

அனுஷம் : சிக்கல்கள் குறையும்.

கேட்டை : தனவரவு மேம்படும்.
—————————————

தனுசு

புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
—————————————

மகரம்

பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். பொருட்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
—————————————

கும்பம்

இடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.

சதயம் : அனுகூலம் உண்டாகும்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
—————————————

மீனம்

தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உறவுகளிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி : நன்மை உண்டாகும்.

ரேவதி : நிதானம் வேண்டும்.
—————————————

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here