இன்றைய (19-03-2020) ராசி பலன்கள்

0
71

ஜோதிடர் ஸ்ரீ எஸ் பத்மநாப கோவர்த்தனன் 

மேஷம்

குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும்.

பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.
—————————————

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

ரிஷபம்

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர்களின் மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு செயலிலும் அவரசமின்றி, நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.

ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.

மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
—————————————

மிதுனம்

செயல்பாடுகளில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். வேடிக்கையான பேச்சுக்கள் சில நேரங்களில் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

மிருகசீரிஷம் : கருத்துக்களை தவிர்க்கவும்.

திருவாதிரை : பேச்சில் கவனம் வேண்டும்.

புனர்பூசம் : சாதகமற்ற நாள்.
—————————————

கடகம்

பிரபலமானவர்களின் நட்பு அதிகரிக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

புனர்பூசம் : நட்பு அதிகரிக்கும்.

பூசம் : நன்மை உண்டாகும்.

ஆயில்யம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
—————————————

சிம்மம்

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத செலவுகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியத்தில் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரம் : அமைதி வேண்டும்.

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————

கன்னி

பிள்ளைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் உண்டாகும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாகனத்தை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.
—————————————

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

துலாம்

வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத வாதங்கள் உருவாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் இலாபம் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.

சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————

விருச்சகம்

பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை உண்டாகும். இல்லத்தில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கத்து வீட்டாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : நன்மை உண்டாகும்.

அனுஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.

கேட்டை : அனுசரித்து செல்லவும்.
—————————————

தனுசு

பொருளாதார ரீதியாக உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களின் பலம் மற்றும் பலவினங்களை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மூலம் : ஆதரவு கிடைக்கும்.

பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
—————————————

மகரம்

தனவரவுகளால் திருப்திகரமான சூழல் உண்டாகும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இலாபகரமான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : திருப்திகரமான நாள்.

திருவோணம் : குழப்பம் உண்டாகும்.

அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.
—————————————

கும்பம்

எதிர்பாராத தனவரவு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களை எண்ணம் போல் மாற்றியமைப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : தனவரவு உண்டாகும்.

சதயம் : செலவுகள் ஏற்படும்.

பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————

மீனம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எண்ணிய காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கலைப்பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

ரேவதி : செல்வாக்கு உயரும்.
————————————–

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here