இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1718ஆக உயர்வு….

3
161

டெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 1718 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதுமான ஊரடங்கு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளாவில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 52 பேர் மரணமடைந்தனர். 15ச பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 325 பேரும், கேரளாவில் 241 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 124 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் பலியானார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here