இதை செய்யுங்க! கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் – நடிகர் விவேக் டிப்ஸ்!

0
146

சென்னை : கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவ வாய்ப்புகள் உள்ளதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி, வானொலி, கைபேசி, போன்றவற்றில் அடிக்கடி கை கழுவும் படியும், சாதாரண தும்மல், சளி, போன்ற பாதிப்பு இருந்தால் கூட மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இந்நிலையில் நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ஒரு சில டிப்ஸ்சுகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்….

தற்போது உலகம் முழுக்க அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியா போன்ற, அதுவும் தமிழ்நாடு போன்ற ஒரு அதிகமான வெப்பம் உள்ள இடத்தில் தாமாகவே அழிந்து விடும்.

எனவே இது குறித்து யாரும் பயப்படவேண்டாம். இருப்பினும் பாதுகாப்பு காரணமாக அனைவரும் அடிக்கடி கையை சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இருமல், தும்மல், வந்தால் கைக்குட்டை மூலம் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்வது நல்லது. அல்லது தும்பல் அடிக்கடி வரும் நபருடன் நெருங்கி பழகுவதை தவிருங்கள். மேலும் அவரை மாஸ்க் போட சொல்லி அறிவுறுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமாக, நம் தமிழர் கலாச்சாரம் ஒன்று உள்ளது. யாருக்கும் கைகொடுக்காமல், கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டும். இதை கடைபிடித்தால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here