ஆர்கானிக் உணவு நல்லதா? கெட்டதா?

117
991

நமது வழக்கமான உணவைவிட ஆர்கானிக் உணவு சாப்பிடுவது சிறந்தது என்ற கருத்து தற்போது மேலோங்கியுள்ளதுடன் ஆர்கானிக் உணவுப்பொருட்களை பலர் நாட ஆரம்பித்துவிட்டனர். உணவுப்பொருட்கள் மட்டுமல்லாமல் மூலிகைகளால் ஆன ஆர்கானிக் அழகுசாதனப் பொருட்களுக்கும் தற்போது மவுசு அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

முதலில் ஆர்கானிக் உணவு என்றால் என்ன என்று பார்ப்போம். ‘ஆர்கானிக்’ எனும் வார்த்தை ‘இயற்கையானது’ என்பதைக் குறிக்கிறது. அதாவது இரசாயனக் கலப்பில்லாமல் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மூலிகைகளையும் ஹார்மோன்களோ மருந்துகளோ கொடுக்காமல் வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி,பால்,முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் இது குறிக்கிறது.

இப்போது ஆர்கானிக் உணவை உட்கொள்வதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளைப் பார்ப்போம்.

நன்மைகள்
1.ஆர்கானிக் உணவுப் பொருட்களில் செல் சிதைவுகளைக் தடுக்கக்கூடிய அன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருக்கின்றன. இதனால், உடலில் சத்துகள் சேர்வதுடன் ஹார்மோன் பிரச்சினைகள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்புகள், புற்றுநோய் என பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

2. விளைநிலங்களில் இரசாயன உரமோ பூச்சிக்கொல்லிகளோ பயன்படுத்தப்படாததால் சூழல் மாசடைவு குறைக்கப்படுகிறது. குறிப்பாக விளைநிலங்களைச் சூழ உள்ள பகுதிகளும் அருகிலுள்ள நீர்நிலைகளும் சுத்தமாக இருக்கும்.

3.ஆர்கானிக் உணவுப்பொருட்களில் கனியுப்புக்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் இதன் சுவை சாதாரண உணவுகளை விட பல மடங்கு அதிகம்.

4.சாதாரண உணவுப்பொருட்களில் கலந்துள்ள சில இரசாயனப்பொருட்கள் மலட்டுத்தன்மையை உருவாக்கக்கூடியவை. எனவே ஆர்கானிக் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது மலட்டுத்தன்மை ஏற்படாது. அதேநேரம் ஆர்கானிக் உணவு கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து அதிகளவு இறைச்சி, பால், மற்றும் முட்டையை பெறமுடியும் என ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

5.ஆர்கானிக் உணவுப்பொருட்களை உட்கொள்வதால் உடல் பருமனடைவதைக் கட்டுப்படுத்துவதுடன் தேவையற்ற எடையை குறைக்கவும் முடியும். டயட்டில் இருப்பவர்கள் ஆர்கானிக் உணவுகளை நாடுவதற்கு இதுவே காரணம்.

தீமைகள்
1.ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்குவதென்றால் அதிகளவு பணம் செலுத்த வேண்டும். இதற்குக் காரணம் இயற்கை விவசாயத்தில் குறைந்தளவிலான உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளமையாகும்.

2. பல ஆர்கானிக் உணவுப்பொருட்களை நீண்டநாள் வைத்துப் பயன்படுத்த முடியாது. இவை பதப்படுத்தப்படுவதில்லை என்பதால் சீக்கிரம் கெட்டுப்போகும்.

3. நாம் வழக்கமாக பயன்படுத்தும் உணவுப்பொருட்களை எங்கும் எப்போதும் வாங்கிவிடலாம். ஆனால் ஆர்கானிக் உணவுப்பொருட்கள் எல்லா இடங்களிலும் எல்லாக் கடைகளிலும் கிடைப்பதில்லை. சிலவகை பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதுண்டு.

எது எப்படியிருந்தாலும் ஆர்கானிக் உணவுப்பொருட்களை உட்கொள்வதால் தீமைகளைவிட நன்மைகளே அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் விலை அதிகம் என்பதுதான் இங்குள்ள முக்கிய சிக்கல். குறைந்த விலையில் ஆர்கானிக் உணவுப்பொருட்களை எப்படிப் பெறலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்.

1.ஆர்கானிக் உணவுப்பொருட்களை கடைகளில் வாங்குவதற்குப் பதிலாக நேரடியாக அதன் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யலாம்.

2. நீண்டகாலம் சேமித்து வைக்கக்கூடிய தானியவகை போன்றவற்றை அவை உற்பத்தியாகும் காலப்பகுதிகளில் bulk ஆக அதிகளவில் கொள்வனவு செய்து சேமித்து வைக்கலாம்.

3. நீங்கள் தேடும் சில ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் இணையம் ஊடாக ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

4. உங்கள் வீட்டிலேயே தேவையான காய்கறிகளையும் பழங்களையும் மூலிகைகளையும் உற்பத்தி செய்யுங்கள். இது ஒரு சிறந்த பொழுதுபோக்கும் கூட.

நாம் வாங்கும் பல பொருட்கள் ஆர்கானிக் முறையில் உற்பத்திசெய்யப்பட்டவை என்பதை அவற்றின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் லேபல்களைக் கொண்டு அறியலாம். ஆனால் பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை விவசாயத்தில் விளைந்ததுதான் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?

காய்கறிகள், பழங்களைப் பார்க்கும் போதே பளபளவென்று இருந்தால், அது இரசாயன விளைச்சல். இயற்கை விளைபொருட்களின் தோல் மென்மையாக இருக்கும், சீக்கிரம் வேகும். இவற்றின் சுவையும் அருமையாக இருக்கும். இயற்கையில் விளைந்த பொருட்களுக்கு அவற்றுக்கென பிரத்யேக மணம் இருக்கும். மேலும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் சீக்கிரமே பூச்சிகள் வந்துவிடும். கீரைகளிலும் சின்ன சின்ன ஓட்டைகளை நீங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

117 COMMENTS

 1. I seriously love your site.. Very nice colors & theme.

  Did you create this web site yourself? Please reply back as
  I’m attempting to create my own personal site and would love to learn where you got this from or
  just what the theme is named. Thank you!

 2. I just like the valuable information you supply for your articles.
  I will bookmark your blog and take a look at once more here frequently.
  I am rather certain I’ll be told plenty of new stuff proper here!
  Good luck for the next!

 3. I’m curious to find out what blog system you are working with?
  I’m having some minor security issues with my latest blog and I would like to find something more safeguarded.
  Do you have any recommendations?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here