அவினாசி கோரா விபத்து : கைது செய்யப்பட்டார் லாரி ஓட்டுநர்!

3
270

இன்று அதிகாலை 03:15 மணி அளவில் கேரளாவில் இருந்து டைல்ஸ் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவர்களை உடைத்துக்கொண்டு போய் எதிரே வந்த பேருந்தில் மோதியதில் 20 பேர் பலியாயினர். இந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்https://bit.ly/38nedPz

கர்நாடகாவில் இருந்து அவிநாசி வழியாக கேரளா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 20 நபர்கள் உயிரிழப்பு. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்து இன்று காலை 03:15 மணி அளவில் அவிநாசியை கடந்து சென்றுள்ளது.

அப்போது எதிர்புறமாக வந்து கொண்டிருந்த லாரி, ஓவர் டேக் செய்ய முற்பட்டு, கட்டுப்பாட்டினை இழந்துள்ளது. கட்டுப்பாட்டினை இழந்த லாரி, தடுப்புச் சுவர்களை உடைத்து எதிரில் வந்த பேருந்துடன் அதீத வேகத்தில் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேருக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்கள் மற்றும் அந்த பேருந்தில் பயணத்தவர்கள் குறித்த தகவல்களை கொள்ள அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன். உதவிகள் தேவைப்படும் நபர்கள் 7708331194 என்ற எண்ணில் இருக்கும் அழகரசனிடம் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

48 பயணம் செய்த இந்த பேருந்தில் 25 நபர்கள் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் பாலக்காட்டினை சேர்ந்தவர்கள். 19 பேர் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பேருந்தில் பயணித்தவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோஸ்லீ (பாலக்காடு), க்ரீஷ் (எர்ணாக்குளம்), இக்னி ரஃபேல் (திருச்சூர்), கிரண் குமார், ஹனீஷ் (திருச்சூர்), சிவக்குமார் (ஒட்டப்பாலம்), ராஜேஷ் கே (பாலக்காடு), ஜிஸ்மோன் ஷஜூ (துரவூர்), நசீப் முகமது (திருச்சூர்) ஆகியோர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

பேருந்தில் பயணித்த கரிஷ்மா கூறும் போது “இந்த பேருந்து விபத்து காலை 03:15 மணி அளவில் நடைபெற்றது. அப்போது நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தோம். நான் நடத்துனரின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். எப்படி இந்த ஆக்சிடெண்ட் நடந்தது என்று என்னால் நினைவு கூற இயலவில்லை. ஆனால் நான் கண் திறந்து பார்த்த போது பாதி பேருந்து அப்படியே நொறுக்கப்பட்டிருந்தது. ஓட்டுநரின் வரிசையில் ஒன்றுமே இல்லை. எனக்கு முன்னாள் அமர்ந்திருந்த நடத்துனரும் உயிருடன் இல்லை என்று அறிந்தேன். பலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறினர். நான் பேருந்தின் பேக்கேஜ் சேம்பர் வழியாக் வெளியே வந்தேன் என்று கூறினார்.

அவினாசி பேருந்து விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேமராஜ் கைது செய்யப்பட்டார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்https://bit.ly/38nedPz

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here