அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா – டிரம்ப் பரபரப்பு பேச்சு

0
137
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவில் 24, 25-ந் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் ஆகியோரும் வருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, கொலராடோ மாகாணத்தில் நேற்றுமுன்தினம் நடந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில், தனது இந்திய பயணம் பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு போகிறேன். பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாங்கள் வர்த்தகம் பற்றி பேசப்போகிறோம். அவர்கள் வர்த்தகத்தில் நம்மீது பல்லாண்டு காலமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் நமது பொருட்களுக்கு மிக கூடுதலாக வரி விதிக்கிறார்கள். உலகிலேயே கூடுதலாக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

இந்தியாவும், அமெரிக்காவும் பெரியதொரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். ஒரு நல்ல ஒப்பந்தம் அமையாவிட்டால், இதையொட்டிய பேச்சுவார்த்தை மந்தமாகி விடும் என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு, ராணுவ உறவு இருந்தாலும் கூட வர்த்தக உறவில் உரசல்கள் தொடர்கின்றன.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்து வருவதாக டிரம்ப் தொடர்ந்து சாடி வருகிறார்.

அது மட்டுமன்றி இந்தியாவுடன் வர்த்தக சம நிலை இல்லை என்றும், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் அவர் குறை கூறி வருகிறார்.

அமெரிக்க பண்ணை பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதற்கான சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கித்தர வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை குறைப்பதுடன், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால் அமெரிக்கா, இதில் அசைந்து கொடுப்பதாக இல்லை.

இந்தியாவுடனான வர்த்தகத்தை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இந்தப் பயணத்தின்போது, பெரிய அளவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்து கொள்ளாது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் இரு தரப்பு உறவு, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்களை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here