அன்று எஸ்.ஐ. பாலகிருஷ்ணனை மன்னித்ததால் இன்று 2 உயிர்கள் போய்விட்டன..கண் கலங்கிய நபர்

17
149

நெல்லை : தன்னை தாக்கிய எஸ்.ஐ பாலகிருஷ்ணனை மன்னித்து விட்டதால் அவர் தற்போது சாத்தான்குளத்தில் இருவரின் இறப்புக்கு காரணமாகிவிட்டார் என நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த மணி என்பவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் தொடர்புடைய எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் பணியாற்றியுள்ளார்.

அப்போது விசாரணையின் போது மணி என்பவருக்கு ரத்தம் வருமாறு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் மணி புகாரளிக்க, விசாரணை நடத்தப்பட்டது, இந்த புகாரால் தனது வேலை பரிபோகும் நிலை ஏற்பட்டதை அறிந்த பாலகிருஷ்ணன், வழக்கை திரும்ப பெறுமாறு மணியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து பேசிய மணி, தான் பாலகிருஷ்ணனை மன்னித்து விட்டதால் இன்று 2 உயிர் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

17 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here