அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்; கடந்த 20 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை…..

0
19

சென்னை: கடந்த 20 நாட்களாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது. அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன.

நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 7-ம் தேதியில் இருந்து இன்று வரை 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.37-க்கும், டீசல் ரூ.77.44-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ.7.83ம், டீசல் விலை ரூ.9.22ம் வரலாற்றில் முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இம்மாத இறுதிக்குள் புதிய உச்சத்தை தொடவுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90ஐ கடக்கும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் விலையேற்றத்தால், லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here